Thursday, 14 September 2017

14/9/17 மத்திய சங்கம் DOT க்கு கடிதம்

துணை டவர் கம்பெனி உருவாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து
DOT செகரட்டரிக்கு நமது பொதுசெயலர் கடிதம் எழுதியுள்ளார்.
                               நிர்வாகம் தூக்கத்திலிருந்து விழித்தது

சென்னை CGM அலுவகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வதென்று
முடிவு செய்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது .இந்த சூழ்நிலையில்
நிர்வாகம் மாநில சங்கங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
அதோடு மாவட்ட நிர்வாகங்களூக்கு பல்வேறு கடிதங்கள் எழுதி வருகிறது.நாமும்
நிலைமையை கண்காணித்து வருகிறோம்.19,20,21 மூன்று நாட்கள் சென்னை 
உண்ணாவிரதத்திற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன்.

Tuesday, 12 September 2017

                              சென்னை போராட்டம் ஓத்திவைப்பு

நிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக சென்னையில் நடைபெற‌
இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வார காலத்திற்கு தள்ளி
வைப்பு. 19/9/17 முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
சென்னை செல்ல தயாராக இருப்போம்.

Thursday, 7 September 2017

                                                       வெட்கக்கேடு

மத்திய BJP மோடி அரசாங்கம்  கார்ப்பரேட்களுக்கு 
சலுகைகள்,உதவிகள் செய்துவருவது நம் அனைவருக்கும்
தெரியம். ஆனால் தற்போது செய்திருப்பது அப்பட்டமாக‌
தெரிகிறது.
தபால் அலுவலகஙகளில் RELIANCE JIO சிம் விற்பதற்கு
உடன்பாடு போடப்பட்டு. உத்திரபபிரதேச மாநிலம்
லக்னோவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான BSNL  சிம்மை விற்பதற்கு இதுவரை
முயற்சி செய்யவில்லை.கார்ப்பரேட் சிம்மை விற்பதற்கு
அனுமதி கொடுத்துள்ளதை நாம் வெட்கப்பட வேண்டிய விஷ்யம்
                                  பூனைகுட்டி வெளியில் வந்தது

நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் பணியில்
தனியாரையும் ,ப்ன்னாட்டு நிறுவனங்களையும் மோடி
அரசாங்கம் அனுமதி கொடுத்துளளதற்கு நாட்டின் பற்று
உள்ள அனைவரும் எதிர்த்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு ,இறையாண்மைக்கு ஆபத்து என்று
தெரிந்துருந்தும் BJP அரசாங்கம் இதை செய்கிறது. தற்போதுதான்
தெரிகிறது இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கொள்ளையடிக்க‌
கொண்டுவரப்பட்டுளளது.
கொளதம் அதானி சுவீடன் கம்பெனியுடன் உடன்பாடு போட்டு
ஃபட்டர் ஜெட் விமானம் தயாரிக்கவுள்ளார்.

அரசு நிறுவனஙகள் ,பொதுதுறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்துவது
கார்ப்பரேட் நலன்கருதிதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

                                      மீண்டும் பட்டை நாமம்

BSNL  ஊழியர்களுக்கு 15% பிட்மமெண்ட் அடிப்படையில்
ஊதியதிருத்தம் செய்ய ஆதரவாக இருந்தாலும் DOT
தயாராக இல்லை

சமீபத்தில் நம்பதகுந்த வட்டாரங்களீலிருந்து கிடைத்துள்ள‌
செய்தி என்னவென்றால் BSNL நிதி நிலைமை சரியில்லை ஆகவே
BSNL ஊழியர்களூக்கு ஊதிய திருத்தம் செய்ய வேண்டாம் என்று
அமைச்சரிடம் கூறியுள்ளது. அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
DOT ஆதரவாக உள்ளது அமைச்சர் ஆதரவாக உள்ளார் என்று நம்மிடையே
சில தலைவர்கள் கூறினார்கள்.BSNL ஊழியர் சங்கம் திரும்ப திரும்ப சொல்லி
வருகிறது இந்த அரசாங்கத்தின் குணத்தை புரிந்து கொண்டு ஒன்று பட்டு
போராடினால்தான் முடியும் நாம் ஊதிய்ருத்தம் பெற முடியும் என்பதை
தற்போதாவது புரிந்து கொண்டு ஒன்று பட்ட போராட்டத்திற்கு தயாராவொம்

அதற்கு சமிபத்திய உதாரணம் நிலக்கர் ஊழியர்கள் போராட்டம்.அங்கு
BMS உள்பட ஒன்றுபட்டு நின்று போராடி 20 சதவீதம் 5 ஆண்டு ஒப்பந்தம்
என்பதை நிறை வேற்றவுள்ளனர்.இத்தனைக்கும் DPE கூறியது 15% பத்து
ஆண்டு என்பதை ஒன்றுபட்டு முறியடித்துள்ளனர்.
தேசிய கவுன்சில் முடிவுப்படி JTO CIVIL   ம்ற்றும்  ELECTRICAL
LICE தேர்வுகளை உடனடியாக நடத்தவும் மத்தியசஙகம் கோரிக்கை

கேடர்பெயர் மாற்ற கூட்டம் 

கேடர்பெயர் மாற்ற கூட்டத்தில் 
DRAFTS MAN   கேடர்  JE CIVIL என்றும்
CHARGEMAN    கேடர்   JE TF    என்றும் பெயர் மாற்ற‌
ஒத்துக்கொண்டுள்ளது.
மற்ற 15 கேடர்கள் சம்மந்தமாக 26/9/17 அடுத்த கூட்டத்தில்
தொடர்ந்து விவாதிப்பது.